கடந்த ஒரு வருடத்தில் நாட்டில் பணவீக்கம் 62.1 சதவீதத்தினால் குறைந்துள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த 2022 ஆம் ஆண்டின் முதலாம் மற்றும் இரண்டாம் காலாண்டுகளில் 66.7 சதவீதமாக இருந்த பணவீக்கத்தை 2023ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியில் 4.6 சதவீதம் வரை, குறைக்க முடிந்துள்ளது.
1.8 பில்லியன் டொலர்களாக இருந்த நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பை, கடந்த ஓராண்டில், 3.8 பில்லியன் டொலர்களாக அதிகரிப்பதற்கு முடிந்துள்ளது.
மேலும் 2022ஆம் ஆண்டு 14 சதவீதமாக இருந்த வங்கி வைப்பு வட்டி விகிதம் தற்போது 11 சதவீதமாகக் குறைந்துள்ளதுடன், 15.5 சதவீதமாக இருந்த கடன் வட்டி விகிதத்தை, இந்த ஆண்டு 12 சதவீதம் வரை குறைக்க முடிந்துள்ளது. என தெரிவித்துள்ளனர்.