யாழ்ப்பாணம் – தாழையடிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து சம்பவத்தில் யாழ் – தாழையடியைச் சேர்ந்த 60 வயதுடைய சின்னையா தனபாலசிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை (15.09.2023) தாழையடிப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மருதங்கேணி கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று (21.09.2023) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.