இலங்கை மற்றும் ஈரான் ஜனாதிபதிகளிடையே சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஈரான் ஜனாதிபதி H.E. Dr Seyyed Ebrahim Raisi ஆகியோரிடையே உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தொடருடன் இணைந்தவாறு குறித்த இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் இரு தலைவர்களும் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுவதுடன் ஈரான் ஜனாதிபதியை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இதனைதொடர்ந்து குறித்து அழைப்பை ஈரான் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *