அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள கடலானது நீல நிறத்தில் ஒளிர்கின்றமை இப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் இந்த அழகிய அதிசய காட்சியினை காண்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக இவ்விடத்திற்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
கடலில் வாழ்கின்ற ஒரு வகையான அல்கா (algae) இனத்தின் உடலில் இடம்பெறுகின்ற இரசாயன மாற்றத்தின் காரணமாக அவற்றின் உடலிலிருந்து உமிழப்படும் ஒளி நீல நிறத்தில் மின்னுவதனால் கடல் நீல நிறத்தில் காட்சியளிக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த அல்கா (algae) இனமானது சிறிய மீன்களில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக இந்த பொறிமுறையினை பயன்படுத்துவதாகவும், சில சமயங்களில் கப்பல் படகுகள் போன்றவற்றின் அழுத்தம் காரணமாக அதற்கு எதிர்வினைக்காக இந்த ஒளி உமிழும் இரசாயன மாற்றம் நிகழ்வதாகவும் விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர்கள் மேலும் விபரிக்கையில் மின் மினிப் பூச்சிகளும் ஒளி உமிழும் ஆற்றல் கொண்ட ஓர் உயிரினமாக இருக்கிறது தரையில் வாழும் மின்மினிப்பூச்சிக்கும் நீரில் வாழும் இந்த அல்கா (algae) இனத்திற்கும் ஓர் ஒற்றுமை உள்ளது.
இவை இரண்டின் உடலிலும் சுரக்கின்ற லூசிஃபெரின் (luciferin) எனப்படும் இரசாயனமே இந்த ஓளி உமிழ்விற்கு காரணம் என்று கூறப்படுகிறது.