பிங்கிரிய பகுதியில் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டில் இருந்த பெண்ணின் கைகளையும் வாயையும் கட்டி வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் தங்க ஆபரணங்களை திருடி தப்பிச் சென்ற இருவரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஹல்மில்லவெவ-கனேகொட பகுதியைச் சேர்ந்த பத்மா ரோஹினி செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதி காலை வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத இருவர் வலுக்கட்டாயமாக குறித்த பெண்ணின் கை, கால், வாயைக் கட்டிவிட்டு கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த திருட்டு சம்பவத்தில் வீட்டில் இருந்த 3,75,000 ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் மற்றும் 1,50,000 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.