அவிசாவளையில் துப்பாக்கி சூடு : இருவர் பலி – ஆபத்தான நிலையில் மேலும் இருவர்!

கேகாலை அவிசாவளை வீதியில் அவிசாவளை மேல் தல்துவ மர வேலைப்பாடு பட்டறைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்றிரவு 11.15 மணியளவில் முச்சக்கரவண்டியில் பயணித்த குழுவினர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளனர்.  அத்துடன், உயிரிழந்தவர்கள் அவிசாவளை தல்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 27 வயதுடையவர்களாவர். 

மேலும், அதே முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்து அவிசாவளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அவர்களில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இவ்வாறு காயமடைந்த இருவரும் அவிசாவளை தல்துவ பிரதேசத்தில் வசிக்கும் 43 மற்றும் 42 வயதுடையவர்கள்.

இறுதிச் சடங்கொன்றில் கலந்து கொள்வதற்காக அவர்கள் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் அவிசாவளை பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *