அனுராதபுரத்தில் கதிரையில் அமர்ந்திருந்தவர் திடீரென உயிரிழந்தது அந்தப் பகுதியில் பெரும் பேசு பொருளானது.
அருகிலுள்ள நகரிலிருந்து தேவையின் நிமித்தம் அங்கு வந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்திருந்த குறித்த நபர் அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கதிரையில் அமர்ந்திருந்த வேளையில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் நீண்ட நேரமாக கதிரையில் அமைதியாக இருந்துள்ளார். அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக அங்கிருந்தவர்கள் எண்ணியுள்ளனர். எனினும் சந்தேகம் ஏற்பட்ட நிலையில் அருகில் சென்று பரிசோதித்த போது, அவர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
அத்துடன் இது குறித்து உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.