ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இன் அதிகாரப்பூர்வ கீதம் இன்று (செப்டம்பர் 20) வெளியிடப்பட்டது.
‘தில் ஜாஷ்ன் போலே’ என்று பெயரிடப்பட்டுள்ள குறித்த கீதம் தற்போது யூ டியூபில் வெளியாகியுள்ளது. அதில் இந்திய பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளதுடன் இந்திய இசையமைப்பாளர் ப்ரீதம் சக்ரவர்த்தி இசையமைத்துள்ளார்.
இந்தியா நடத்தும் ஐசிசி உலகக் கோப்பை 2023, எதிர்வரும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 19 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து உட்பட பத்து அணிகள் பங்கேற்கின்றன.