ராகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இருந்து 19 வயதுடைய பிக்கு ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சிறுமிகளின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்கள் ஊடாக விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, நடத்தப்பட்ட விசாரணைகளின் மூலம், சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்ற புலனாய்வு அதிகாரிகள், இவ்வாறு நிரவாண புகைப்படங்கள் விற்பனை செய்யும் நடவடிக்கைகள் அந்தக் விகாரையில் இருந்தே இடம்பெற்றுள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.
விகாரையின் கணினியில் சுமார் 1,500 சிறுமிகளின் நிர்வாணக் காட்சிகள் இருந்தன, மேலும் அதில் 80 சதவிகிதம் 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளுடையதென தெரியவந்துள்ளது.
இந்த நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் விற்றதாக குறித்த இளம் பிக்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
இதன்படி கைது செய்யப்பட்ட பிக்கு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.