நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், தீவின் பல பகுதிகளுக்கு முதல் கட்ட மண்சரிவு அபாய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி, காலி மாவட்டத்தின் அல்பிட்டிய மற்றும் நாகொட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் களுத்துறை மாவட்டத்தின் தொடம்கொட, அங்கலவத்தை, மத்துகம, வலல்லாவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, புலத்கொஹுபிடிய, யட்டியந்தோட்டை மற்றும் தெரணியகல, மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட மற்றும் பிடபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் அஹெலியகொட பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல் கட்டத்தின் கீழ் அவதானமாக இருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.