தனது இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்திய நபர் ஒருவர் குறித்த செய்தி புடலுஓயா ஹரோவத்த பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
11 மற்றும் 8 வயதுடைய தனது இரண்டு பிள்ளைகளின் உணவில் விஷம் கலந்ததாகவும், அவரும் விஷத்தை உட்கொண்டதாகவும், தெரியவருகிறது.
மேலும் மூவரும் ஆபத்தான நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபரின் மனைவி தனக்குத் தெரிவிக்காமல் கொழும்பு பகுதிக்கு வேலைக்குச் சென்றதால், மனமுடைந்த சந்தேகநபர் குழந்தைகளுக்கு விஷம் வைத்து தானும் விஷம் அருந்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரும் அவரது இரண்டு பிள்ளைகளும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், சம்பவம் தொடர்பில் புடலுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.