வத்தளை, பள்ளியாவத்தை கடற்கரையில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் மீ்ட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடற்கரையில் சடலம் ஒன்று காணப்படுவதாக நேற்று முன்தினம் (18.09.2023) மாலை கிடைத்த தகவலின் அடிப்படையில் வத்தளை பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 65 முதல் 70 வயதுக்கு உட்பட்ட, 5 அடி 5 அங்குல உயரமும், மெலிதான உடலைக் கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.