கொழும்பு – கொத்தடுவ IHD நீர் வழங்கல் சபைக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தந்தையும் மகளும் நீர் தேங்கியிருந்த பாரிய பள்ளமொறில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (19.09.2023) காலை இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் சுமார் 16 அடி ஆழமுள்ள குழியில் விழுந்துள்ளனர்.
இருப்பினும், தந்தையும் மகளும் பாதையில் சென்ற நபர்களின் உதவியோடு மீட்கப்பட்டுள்ளனர்.
வீதியில் குடிநீர் குழாய் உடைந்ததன் காரணமாக இவ்வாறு பாரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.