நீச்சல் தடாகத்தில் இருந்து கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இச்சடலமானது நேற்று(18) இரவு ரத்கம மயானத்திற்கு பின்புறம் உள்ள தடாகத்தில் இருந்து மீட்கப்பட்டதாக ரத்கம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தடாகத்தில் சடலம் ஒன்று மிதப்பதாக கிடைத்த தகவலிற்கு அமைய, காவல்துறையினர் சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் ரத்கம கம்மெத்தேகொட, கோனாபினுவலகே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஷெஹான் நிலங்க என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை, இன்றைய தினம் நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இச்சம்பவம் குறித்து ரத்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.