திருகோணமலை பிரதேசத்தில் சிங்கள காடையர்களின் தாக்குதலுக்கு இலக்கான தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவூர்தி வவுனியாவை வந்தடைந்துள்ளது.
குறித்த ஊர்திப் பவனியில் பங்கெடுத்து தாக்குதலுக்குட்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினரும் வவுனியாவை வந்தடைந்தனர்.
இதேவேளை, இன்று முல்லைத்தீவிலிருந்து வாகன நினைவூர்தி பயணத்தை ஆரம்பிக்கும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.