பதுளை – ஹாலிஎல பிரதேச செயலகத்திற்கு முன்பாக வான் ஒன்று வீதியை விட்டு விலகி மதிலில் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் விபத்துக்குள்ளாகியவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் பண்டாரவளை பிரதேசத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் லுனுகலவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பும் வேளை விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மூன்று மகள்கள் மற்றும் தந்தையின் சகோதரி ஆகியோர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.