பேருவளை சுனாமி கிராமத்தில் உள்ள வீடுகளின் பாதுகாப்பிற்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பேருவளை சுனாமி கிராமத்தின் வீடுகள் மீது இரவும் பகலும் கல் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராய பேருவளை பொலிஸ் நிலைய கட்டளை அதிகாரி பேருவளை கிராமத்திற்கு விஜயம் செய்தார்.
68 வீடுகளில் வசிக்கும் மக்களை ஒரு கும்பல் கற்களை வீசி துன்புறுத்துவதாக 20க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
அதன்படி பொலிஸ் நிலைய கட்டளை அதிகாரி அந்த கிராமத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்ததுடன், மக்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.