மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது சிறிய ரக விமானமொன்று ஓடுபாதையில் இருந்து விலகி இரண்டு பாதியாக உடைந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
கனமழை காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், அதில் பயணம் செய்த எட்டு பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, விமான நிலையத்தில் உள்ள இரண்டு ஓடுபாதைகளும் சிறிது நேரம் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மும்பை விமான நிலையத்துக்கு வந்த 9 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
மும்பை விமான நிலையத்தில் கடுமையான மழை பதிவாகியமை இந்த விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. மேலும், விபத்தில் சிக்கிய ஜெட் விமானத்தில் தீ பற்றியுள்ளதுடன், தீயணைப்பு குழுவினர் விரைந்து தீயை அணைத்து நிலைமையை கட்டுப்பாட்டு கொண்டு வந்துள்ளனர்.