தியாக தீபம் திலீபனின் 36வது ஆண்டு நினைவை முன்னிட்டு பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாரிஸின் 10ம் வட்டாரத்தில் அமைந்துள்ள ஈழத் தமிழர்களின் குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும் லா சப்பல் (la Chapelle ) பகுதியில் எதிர்வரும் 12 நாட்களுக்கு தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படம் வைக்கப்படவுள்ளது.
அத்தோடு பாரிஸ் 10ம் வட்டாரக் பொலிஸார் மற்றும் நகரசபையின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.