யாழ்ப்பாணம் – நாவற்குழியில் உள்ள தனது வேலை அலுவலகத்திற்கு பேருந்தில் வருகை தந்தவர் பேருந்தில் இருந்து இறங்கிய நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் பனை அபிவிருத்தி சபையில் பணிபுரியும் மட்டுவிலைச் சேர்ந்த 50 வயதுடைய மாணிக்கவாசகர் சதீஸ்குமார் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த நபர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் சடலமானது உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.