பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (14) முதல் மேற்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, WWW.UGC.AC.LK என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பங்களை அனுப்ப முடியும். இணையவழி முறையின் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும் என அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான கால அவகாசம் எதிர்வரும் ஒக்டோபர் 05 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.
2022 க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய 263,933 பரீட்சார்த்திகளில் 166,938 பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.