மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற இரு வெவ்வேறு சம்பவங்களில் மாமானாரை வாளால் வெட்டிய சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது சம்பவம் நேற்று முன்தினம் (12.09.2023) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் புதூர் பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை 9 ம் திகதி மதுபோதையில் மனைவியின் தந்தை மீது வாளால் வெட்டி தாக்குதல் நடத்தியதில், அவர் தலையிலும் கையிலும் வெட்டுப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து 30 வயதுடைய மருமகன் தப்பி ஓடி தலைமறைவாகிய நிலையில் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டார்.
மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை 10 ம் திகதி மாமாங்கம் பகுதியில் மதுபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையின் போது மனைவியின் தந்தை மீது வாளால் வெட்டி தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாக்குதல் மேற்கொண்ட மருமகன் தப்பி ஓடி தலைமறைவாகிய நிலையில் அவரும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.