திருகோணமலை- சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாப்பொல கிராமத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (12.08.2023) பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நீலாப்பொல கிராமத்தின் பின்புறமாகவுள்ள காட்டுப் பகுதியில் வைத்தே இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் நீலாப்பொல கிராமத்தைச் சேர்ந்த 47 வயதுடைய டி.டி.சில்வா என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கூலித்தொழிலிக்காக மணல் ஏற்றுவதற்காக சென்ற வேளையில் காட்டுயானை தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபரின் மரணம் தொடர்பான விசாரணையை சேருவில திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டதோடு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சேருவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.