நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்று கவன ஈர்ப்பு போராட்டமொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (12.09.2023) பிற்பகல் 12.00 மணி தொடக்கம் 2.00 மணி வரை ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் என மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
குறித்த போராட்டம் காரணமாக இன்று பிற்பகல் வைத்தியசாலைகள் செயற்பாடுகள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, சேவையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையில் நிலவும் பல பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தி குறித்த போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.