இவரை அடையாளம் கண்டால் உடன் அறிவிக்கவும்: பொதுமக்களிடம் கோரிக்கை!

குற்றப்புலனாய்வு திணைக்கள வளாகத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட ஹரக் கட்டாவை கழிவறைக்கு அழைத்துச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் தற்போது காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தகவல் தெரிவித்துள்ளது.

தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து காணாமல்போயுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் ரவிது சந்தீப குணசேகரவை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இவ்வாறு காணாமல்போன பொலிஸ் கான்ஸ்டபிளின் புகைப்படம் தற்போது பொலிஸ் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள்  07185917774 அல்லது 0718594929 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.