ஹட்டன் பொகவந்தலாவை பகுதியில் இளைஞர் ஒருவர் தனது கழுத்தை தானே வெட்டிக்கொண்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த இச்சம்பவம் நேற்று(11) முற்பகல் பதிவாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் குறித்து தெரியவருகையில் மன அழுத்தத்தால் குறித்த இளைஞர் வீட்டில் யாருமில்லாத சந்தர்ப்பத்தில் தன்னுடைய கழுத்தை வெட்டிக்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.
இந்நிலையில் மயக்கமடைந்து இரத்தப்போக்குடன் குறித்த இளைஞர் கீழே வீழ்ந்துக்கிடந்த நிலையில் அயலவர்கள் பார்வையிட்டதை தொடர்ந்து அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.