அம்பலாந்தோட்டை நகரில் தனியார் பேருந்து ஒன்று மின்சார சபையின் மின்மாற்றியுடன் மோதியதில் பேரூந்து முற்றாக சேதமடைந்துள்ளதுடன், அம்பலாந்தோட்டை நகரிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு தனியார் பேருந்துகளுக்கிடையில் ஏற்பட்ட பயண போட்டி காரணமாக குறித்த தனியார் பேருந்தில் ஏறிய ஒரு குழுவினர், பேரூந்து சாரதியை தாக்கியதுடன் பேருந்தை அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு நிர்ப்பந்திதுள்ளனர்.
இந்நிலையில் கட்டுப்பாட்டையிழந்த பேருந்து மின்மாற்றியுடன் மோதியுள்ளது. குறித்த இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.