அமெரிக்க ஓபன் டெனிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் 19 வயதே ஆன கோகோ காஃப் இறுதிப் போட்டியில் வென்று கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்
19 வயதான கோகோ காஃப் அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டிக்கு நுழைந்த போதே இதுகுறித்து சர்வதேச ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. இருப்பினும் தரவரிசையில் முதல் இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வரும் அரினா சபலென்காவை காஃப் வீழ்த்துவது கடினம் என்றே பலரும் பலவித கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் கோகோ காஃப் 2 – 6, 6 – 3, 6 – 2 என்ற செட் கணக்கில் அரினாவை வீழ்த்தி அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
இதற்கு முன்னதாக 1999ஆம் ஆண்டு, தன் 18 வயதில் செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்று சாதனை புரிந்து இருந்தார்.
அப்போது அவர் புகழ் பெற்ற மார்ட்டினா ஹிங்கிஸ்-ஐ வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையை தன்னகப்படுத்தியிருந்தார்
செரீனா வில்லியம்ஸை தொடர்ந்து தற்போது 19 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மகளிர் வீராங்கனை என்ற பெயரை கோகோ காஃப் பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.