கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் தங்குமிட வசதிகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட 144 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு தொகுதி மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.
குறித்த நடவடிக்கைக்கான அமைச்சரவைப் பத்திரத்தை நகர அபிவிருத்தி அமைச்சர் மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்துள்ளார்.
அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் மேற்பார்வையின் கீழ் கொழும்பு நாரஹேன்பிட்டியில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் குறித்த குடியிருப்பு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த குடியிருப்பு தொகுதியில் சுமார் 800 மாணவர்கள் தங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஏனைய பல்கலைக்கழக மாணவர்களுக்காக இவ்வாறான வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.