மொராக்கோவில் பதிவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அதன்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2012 எனவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 2500 இற்கும் அதிகமாகியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி தெரிவித்துள்ளன.
இதேவேளை மொராக்கோவின் தெற்கில் உள்ள மாகாணங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், அந்த நாட்டின் மன்னரான ஆறாம் முகமது மொரோக்கோரவில் மூன்று நாட்கள் தேசிய துக்க தினத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.
அத்துடன், இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கான தங்குமிடம், உணவு மற்றும் பிற உதவிகளை வழங்கவும் அவர் பணிப்புரை வழங்கியுள்ளார்.