நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாரண்டன் பகுதியில் நேற்று முன்னிரவு முதல் காணாமல் போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (09.09.2023) காலை கிரிமிட்டிய பகுதியில் உள்ள சிறிய நீரோடையில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நானுஓயா – கிலாரண்டன் கீழ் பிரிவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையே (வயது 49) இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நானுஓயா – கிரிமிட்டி நகரப் பகுதிக்குப் பொருட்கள் வாங்குவதற்குச் செல்வதாகக் கூறிவிட்டு நேற்றிரவு வீட்டிலிருந்து சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த நபர் வீடு திருப்பி வராததால் குடும்பத்தினரும், பொதுமக்களும் இணைந்து தேடுதல் நடத்தினர். இந்நிலையில், இன்று காலை சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்துப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. இது தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.