இலங்கை அமைச்சரவையில் பாரியளவில் மாற்றம் ஏற்படலாம் என நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும் அந்த தகவலை ஜனாதிபதி அலுவலகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில் தற்போதைய தகவலுக்கு அமைய, மூன்று சிரேஷ்ட உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தற்போது சுயேச்சையாக செயற்படும் மூத்த உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது.
இந்த சுயேச்சை உறுப்பினர்கள் தற்போது அமைச்சரவை மாற்றுக் குழுவின் தலைவராக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமைச்சரவையில் பல அமைச்சரவைப் பதவிகளுக்குப் பொறுப்பான அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டு புதிய அமைச்சுக்கள் உருவாக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் அரசியலமைப்பு சட்டத்திற்கமைய மேலும் 8 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.