யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் அரிசி ஆலையில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. அளவெட்டி வடக்கு பகுதியில் உள்ள குறித்த அரிசி ஆலையில் நேற்று (08.09.2023) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
வழமைப்போல வேலைகள் நிறைவடைந்த பின்னர் நேற்று மாலை அரிசி ஆலை உரிமையாளரால் பூட்டப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று (09.09.2023) காலை 8 மணி அளவில் அரிசி ஆலையை திறக்கச் சென்றபோது அரிசி ஆலை தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்ட உரிமையாளர், அயலவர்களை அழைத்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்
இதன்போது பல இலட்சம் ரூபா பெறுமதியான அரிசி ஆலை இயந்திரங்கள் உள்ளிட்ட ஏனைய உபகரணங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன
சம்பவம் தொடர்பில் அரிசி ஆலை உரிமையாளரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்