கல்கிஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மாடியிலிருந்து இளம் பெண் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று(09) அதிகாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் இங்கிலாந்தை சேர்ந்தவர் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பெண் தவறி வீழ்ந்தாரா அல்லது தற்கொலை செய்துக்கொண்டாரா என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை.
மேலும் முகநூல் வழியாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவரை காதலித்துள்ளார். இந்த நிலையிலேயே அவர் கல்கிஸ்ஸ பகுதியிலுள்ள அடுக்குமாடி தொடரில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.
மேலும் நாளைய தினம் குறித்த பெண் இங்கிலாந்துக்கு திரும்பி செல்லவிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.