சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் தொடர்பான வாக்கெடுப்பு நேற்று (08) நடைபெற்றுள்ளது.
பொறுப்பற்ற முறையில் தரமற்ற மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களை இறக்குமதி செய்து, சுகாதாரத் துறையை நலிவடையச் செய்து உயிரிழப்புகள் ஏற்படுதலுக்கு காரணமாக அமைதல் என்பனவற்றை காரணமாக் கொண்டு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும் எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன்படி, 40 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்துள்ளது.