சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று (08) நடைபெறவுள்ளது.
பொறுப்பற்ற முறையில் தரமற்ற மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களை இறக்குமதி செய்து, சுகாதாரத் துறையை நலிவடையச் செய்து உயிரிழப்புகள் ஏற்படுதலுக்கு காரணமாக அமைதல் என்பனவற்றை காரணமாக் கொண்டு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று மூன்றாவது நாளாக விவாதம் நடத்தப்பட்டு இன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.