இரண்டு இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து நூற்று எழுபது அஸ்வெசும பயனாளிகளுக்காக கொடுப்பனவு வழங்கும் நிகழ்வின் ஜூலை மாதத்திற்கான இரண்டாம் கட்ட பணிகள் நாளை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளைய தினம் அஸ்வெசும பயனாளிகளுக்கான பணம் வங்கிகளில் வைப்பு செய்யப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஆயிரத்து ஐநூற்று ஐம்பது மில்லியன் ரூபாய் இரண்டாம் கட்டமாக வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.