உணவு விஷமானதால் பயாகல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சுமார் பத்து உத்தியோகத்தர்கள் சுகயீனமடைந்துள்ளதாகவும் பின் அவர்கள் வைத்தியச்சாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இவ்வாறு நோய்வாய்ப்பட்டவர்களில் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் இலஞ்ச ஒழிப்புப் பிரிவின் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களும், பெண் அதிகாரிகளும் மற்றும் பொலிஸாரும் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது நாகொட வைத்தியசாலையின் இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள், ஒரு பெண் பொலிஸ் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோர் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையவர்கள் சிகிச்சை பெற்று நேற்றிரவு (06.09.2023) வெளியேறியுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.