2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தரப் பரீட்சை உயர்தரப் பரீட்சை தொடர்பான மீள் கணக்கெடுப்புகளுக்கான விண்ணப்பங்களை இன்று (07) முதல் மேற்கொள்ள முடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி பரீட்சார்த்திகள் பரீட்சை திணைக்களத்திற்கு சொந்தமான www.doenets.lk என்ற இணையத்தளத்திற்கு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை சென்று மீள் கணக்கெடுப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார் .
அத்துடன், கடந்த முறை பரீட்சைக்குத் தோற்றிய 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு மீண்டும் தோற்றவிருக்கும் மாணவர்கள் மாத்திரமே இம்மாதம் 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை பரீட்சைக்கு விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.