வெளிநாடொன்றில் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் தமிழர் ஒருவருக்கு அதிஷ்டம் அடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. துபாயில் பணிபுரியும் தமிழரான துரைலிங்கம் பிரபாகர் என்பவருக்கே “Abu Dhabi Big Ticket” என்ற அதிஷ்ட இலாப சீட்டிழுப்பின் மூலம் இந்த அதிஷ்டம் கிடைத்துள்ளது.
இவருக்கு இருபது மில்லியன் டிர்ஹாம் அதாவது இலங்கை ரூபாய் பெறுமதியில் 175.75 கோடி அதிஷ்டம் அடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாயில் பணி ஆய்வாளராக பணிபுரியும் டி. பிரபாகர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு பணிக்காக அந்த நாட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரபாகர் தனது பத்து நண்பர்களுடன் இணைந்து குறித்த அதிஷ்ட இலாப சீட்டை வாங்கியுள்ளார். எதிர்பாராமல் கிடைத்த இவ் அதிர்ஷ்டத்தால் பிரபாகர் மற்றும் அவர் நண்பர்களும் இப்போது அதிர்ச்சியடைந்துள்ளனர்.
‘குறித்த பரிசுத்தொகை எங்கள் வாழ்க்கையை மாற்றும்’-என பிரபாகரும் அவரது நண்பர்களும் ஊடகங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.