உக்ரைனின் டோனட்ஸ்க் மாகாணம் கொஸ்டினிவ்கா நகரில் உள்ள சந்தை பகுதியில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் இத்தாக்குதலில் மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். நகரத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள சந்தைப்பகுதி மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அண்டனி பிளிங்கன் உக்ரைன் வந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.