இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் 24,000 ஊழியர்களின் சேவைத்திறன் தொடர்பில் சிக்கல்கள் இருப்பதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மின்சார சபை மறுசீரமைப்பின் போது அந்த ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிலை ஏற்படலாம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான சட்டமூலம் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அதேவேளை சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதி பெற்ற பின்னர் குறித்த சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.