முல்லைத்தீவு-கேப்பாபிலவு சூரிபுரம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் உள்ளூர் துப்பாக்கி தயாரித்த நபரை பொலிஸ் புலனாய்வாளர்கள் கைது செய்துள்ளனர். குறித்த கைது சம்பவமானது நேற்று (04.09.2023) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சூரிபுரம் பகுதியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி தயாரிக்கப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்தை பரிசோதித்த பொலிஸ் புலனாய்வாளர்கள் சட்டவிரோத துப்பாக்கியினை தயாரித்துக்கொண்டிருந்த புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த 36 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் இருந்து சட்டவிரோதமாக தயாரிக்கப்பபட்ட துப்பாக்கிகளின் உதிரிபாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.