நேற்று மாலை வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்கள் விபரம் வெளியாகி உள்ளது.
இதன்படி, காலி ரிச்மண்ட் கல்லூரி மாணவனான சமுதிதா நயனப்ரியா பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
அத்துடன்,கொழும்பு சிறிமாவோ மகளிர் கல்லூரி மாணவி தில்சராணி தருஷிகா வர்த்தகப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன், மாத்தறை சுஜாதா வித்தியாலய மாணவி பிரமுதி பஷானி முனசிங்க உயிரியல் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
மேலும் கொழும்பு றோயல் கல்லூரி மாணவன் கோனதுவகே மனெத் பானுல பெரேரா பௌதீகவியல் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.