லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (04) திருத்தியமைக்கப்படவுள்ளது. அதன்படி, இந்த விலை திருத்தத்தில் லிட்ரோ எரிவாயுவின் விலை கணிசமாக உயரும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உலக சந்தையில் எரிவாயு விலையுடன் ஒப்பிட்டு அதனடிப்படையில் இந்த விலை திருத்தம் செய்யப்படவுள்ளதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை 5 முறைகள் எரிவாயு விலை திருத்தப்பட்டுள்ளது. எனினும் லிட்ரோ நிறுவனம் ஒரு சந்தர்ப்பத்தைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் விலையைக் குறைக்க முயற்சி செய்ததுள்ளது.
எவ்வாறாயினும் இன்று முற்பகல் 10 மணியளவில் லிட்ரோ நிறுவனம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து விலை திருத்தம் எவ்வாறு இடம்பெறும் என்பது அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.