உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அதன்படி, இம்முறை உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் குறுகிய காலத்திற்குள் வெளியிடப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அடுத்த உயர்தரப் பரீட்சை தேதியை மாற்றும் நம்பிக்கை இல்லை என பண்டாரவளையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.
இருப்பினும் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அடுத்த வருடத்திற்கான பரீட்சைகளை மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.