யாழில் இளம் வியாபாரி கடத்தல்: தீவிர தேடுதலில் பொலிஸார்!

யாழ்ப்பாணம்-கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் வியாபாரியொருவர் கடத்தப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த வியாபாரியை நேற்று(02) முற்பகல் 10 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து வாகனமொன்றில் வருகை தந்த 12 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் அவரை தாக்கிவிட்டு கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பழ வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 23 வயதுடைய வியாபாரியொருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்,3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் வியாபாரி கடத்தப்பட்டிருக்கலாம் என கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.