இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு விண்கலமான ஆதித்யா L1 சூரியனை ஆய்வு செய்ய, இன்று காலை 11:50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து திட்டமிடப்பட்டு புறப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த விண்கலம் PSLV-XL(C57) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டுள்ளது.
சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து, சூரியனை ஆராயும் ஆதித்யா எல்-1 குறித்த ஆர்வம் இந்தியா உற்பட உலக நாடுகள் முழுவதும் எழுந்திருக்கிறது. இந்நிலையில் நிலவில் கால் பதித்த கையுடன் சூரியனை ஆராய இஸ்ரோ விண்கலத்தை அனுப்புகிறது என்ற தகவல் வெளியானதையடுத்து, நெருப்புக் கோளமான சூரியனில் விண்கலம் எப்படித் தரையிறங்க முடியும் எனச் சிலர் அச்சமும் கேள்வியும் எழுப்பியுள்ள்து
இவ்வாறு பல கேள்விகள் இருக்கையில் குறித்த ஆதித்யா L1 விண்கலமானது 100-120 நாட்கள் பயணித்து சூரியனின் L1 சுற்றுவட்டப்பாதையை அடைந்து, சூரிய புயல், ஈர்ப்பு விசை, கதிர்வீச்சை ஆய்வு செய்யவுள்ளது .
ஆகஸ்ட் 30 , சூரியனை ஆய்வு செய்ய வடிவமைக்கப்பட்ட ஆதித்யா-எல் 1 மிஷன், ஒத்திகை மற்றும் உள் சோதனைகளை வெற்றிகரமாக முடித்ததாக இஸ்ரோ கூறியது.
சூரியனின் சோலார் கொரோனா எனும் வெளிப்புற பகுதியை ஆய்வு செய்வது இதன் முக்கிய நோக்கம் ஆகும். அத்துடன் சூரிய கதிர்களையும் ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 களமிறங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.