நாட்டில் கடந்த சில நாட்களாக அதிகரித்திருந்த தங்கத்தின் விலையில் நேற்று(01) திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதனடிப்படையில் நேற்று முன்தினம் (31) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 6,29,432 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில், நேற்றைய (01)தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை – ரூ. 6,21,995 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 1,75,550 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 1,61,000 ரூபாவாக பதிவாகியது. அதேசமயம் 21 கரட் 8 கிராம் (ஒரு பவுண் ) தங்கத்தின் விலை – ரூ.1,53,650 ஆக பதிவாகியுள்ளது.
நேற்று முன்தினம் (31) 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 1,77,650 ரூபாவாக பதிவாகியதுடன், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 1,62,900 ரூபாவாக பதிவாகியிருந்தது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தங்கத்தின் விலையானது பாரியளவில் எழுச்சி கண்டமை குறிப்பிடத்தக்கது.