2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை இந்த வார இறுதியில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தற்போதைய சூழ்நிலை காரணமாக அந்த இலக்கை எட்ட முடியாது என பரீட்சை திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வார முற்பகுதியில் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட இந்தத் தேர்வு இந்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி முதல் பிப்ரவரி 17 ஆம் தேதி வரை 2,200 தேர்வு மையங்களில் நடைபெற்றது. அதற்காக இரண்டு இலட்சத்து எழுபத்தி எட்டாயிரத்து நூற்று தொண்ணூற்று ஆறு பாடசாலை விண்ணப்பதாரர்களும் ஐம்பத்து மூவாயிரத்து ஐநூற்று பதின்மூன்று தனியார் விண்ணப்பதாரர்களும் பரிட்சைக்கு தோற்றியிருந்தனர்.